காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

உலக கிண்ண கிரிக்கெட் : மிக குறைந்த ஓட்டங்கள் பெற்ற அணிகள்

உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து சாதித்த அணிகள் ஒருபுறம் இருக்க, ஓட்டுமொத்தமாக மிகக்குறைவான ரன்களை எடுத்து ஆட்டமிழந்த அணிகளும் பல இருக்கின்றன. இவை பெரும்பாலும் கத்துக்குட்டி அணிகள்தான்.

2003 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கனடா 36 ரன்களில் சுருண்டது. இதுவே உலகக் கோப்பையில் ஓர் அணியால் எடுக்கப்பட்ட மிகக்குறைவான ஸ்கோர். அந்த அணியின் 6 வீரர்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை. அதிகபட்சமாக இருவர் 9 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து ஆடிய இலங்கை 4.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 37 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விரைவில் இலக்கை எட்டியும் சாதனை படைத்தது. இதற்கு முன் 1979-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் கனடா அணி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 40.3 ஓவர்கள் களத்தில் இருந்து கனடா வீரர்கள் இந்த ரன்களை எடுத்தனர்.

2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில் நமீபியா அணி 45 ரன்கள் எடுத்தது. 1999-ல் ஸ்காட்லாந்து 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி லீக் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்துக்கு எதிராக 74 ரன்களில் சுருண்டது. ஆனால் அப்போது அதிர்ஷ்டம் பாகிஸ்தான் பக்கம் இருந்தது. இங்கிலாந்து அணி 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

2007-உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து 77 ரன்களிலும், பெர்முடா அணி 78 ரன்களிலும் ஆட்டமிழந்தன. இந்த இரு ஆட்டங்களிலும் இலங்கை வெற்றி பெற்றது. எதிரணிகளைச் சுருட்டி சாதனை புரிந்த இலங்கை அணியும் உலகக் கோப்பையில் ஆடத்தொடங்கிய காலகட்டத்தில் மோசமாகவே பேட் செய்தது.

1975-ம் ஆண்டு உலகக் கோப்பையில் லீக் ஆட்டமொன்றில் அப்போதைய சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கை முதலில் பேட் செய்தது. 37.2 ஓவர்கள் ஆடிய இலங்கை அணி, 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 20.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்து வென்றது.

இங்கிலாந்துக்கு எதிராக கனடா அணி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

Filed under: வினையாட்டு

பின்னூட்டமொன்றை இடுக

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

அண்மைய பதிவுகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,207 வருகைகள்
free counters