காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

மாமுளால் வாழும் காத்தான்குடி போக்குவரத்து சில பொலிசார்கள்.

னிதனுடைய இயந்திரவாழ்வில் போக்குவரத்து இன்றியமையாததாக உள்ளது. அவனது வேலைகளை  நவீன போக்குவரத்தினூடாக இலகு படுத்துகின்றான்.

நமது ஊரான காத்தான்குடியில் தமது வேலைகளை அதிகமானோர் போக்குவரத்தினூடாகவே
நிரைவேற்றுகின்றனர். இதில் போக்குவரத்து […]

Filed under: காத்தான்குடி செய்திகள், காத்தான்குரல்

காத்தான்குடி மாணவிகளின் வெளிபிரதேசக்கல்வி அவசியமா? இல்லையா? உங்கள் வாக்குகளை இங்கே பதிவு செய்யவும்.

‘கல்வி இன்றி மானிடன் இல்லை’ இது முதுமொழி.
‘மானம் போய் கல்வி வேண்டுமா?’ இது எமது கேள்விக் குறி?

சில காலமாக கல்விகற்கைக்காக எமதூர் சில மாணவிகள் வெளிபிரதேசங்களுக்கு சென்று சில அநாச்சார விடையங்களில் நடந்து  கொண்டனர் என்பதை நாம் நன்கு அறிவோம்; இதனடிப்படையில் எமதூர் மாணவிகளின் வெளிப்பிரதேச கல்வி அவசியமா? என நாமே முடிவெடக்க கடமைப்பட்டுள்ளோம். […]

Filed under: காத்தான்குரல்

எஹெட் கரித்தாஸ் பணியாளர் மேற்கொண்ட போலிப் பதிவு நடவடிக்கை முறியடிப்பு

எஹெட் கரித்தாஸ் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுவதாகக் கூறிய காத்தான்குடியைச் சேர்ந்த பெண்ணொருவர், புதிய காத்தான்குடி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வாழுகின்ற குடும்பங்களுக்கு பலதரப்பட்ட உதவிகளை வழங்கப் போவதாகக் கூறி அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்களைப் பெற்று வந்தாராம்.

திருமணப்பதிவு, பிறப்புப் பதிவு, தேசிய அடையாள அட்டை, மரணச் சான்றிதழ், கடவுச் சீட்டு போன்ற ஆவணங்களின் போட்டோப் பிரதிகளுடன் தன்னைச் […]

Filed under: காத்தான்குடி செய்திகள், காத்தான்குரல்

அகவை இரண்டில் ….. பன்மைத்துவங்களைப் புரிந்து கொள்ளல்.

காத்தான்குடி யாஹூ குழுமம் அகவை இரண்டில் கால் பதித்து இருக்கும் நேரத்தில்
எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடல் கடந்து வாழும் அனைத்து உறவுகளையும்
ஊருடன் இணைத்து வைத்ததில் அதன் பங்களிப்பு மிகக் காத்திரமானது.
புதுப் பொலிவுடன் தொடங்கப்பட்டிருக்கும் kattankudi.info மேலும் வளரவும் எமது பிராத்தனைகள்.

இந்த இடத்தில் சில விடயங்களைக் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.
காத்தான்குடி யாஹு குழுமம் தனக்கென சில மனப்பதிவுகளைக் கொண்டிருக்கின்றது.
அவற்றை பொது நிலைப்படுத்திப் பொருத்திப் பார்க்கிறது.
சில வேளை இணைய முயற்சிகள் குறைவாகவே நடை பெற்றுக் கொண்டிருப்பதால் அவை மேலெழும்பியவையாக இருக்கலாம்.
முதலில்,அகவை இரண்டு என்று தலைப்பிட்டு காத்தான்குடி யாஹு குழுமம் சார்பாக எழுதப்பட்டிருந்த
மடலில் தமது இணைய லோகோவைக் கூட வெட்கமில்லாமல் சிலர் பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Filed under: காத்தான்குடி செய்திகள், காத்தான்குரல்

நிர்மானிக்கப்பட்டுவரும் காத்தான்குடி வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் நிதியுதவி அளித்தார் என்பது பொய்! -அமைப்பாளர் றவூப் ஹாஜியார் காட்டம்-

சுனாமியால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி வைத்தியசாலையை மிகப் பிரமாண்டமாக மீண்டும் நிர்மாணிப்பதற்கு தானே நடவடிக்கை எடுத்ததாகவும், தனது நிதி ஒதுக்கீட்டில் அது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த வாரத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அகில இலங்கைத் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்து வந்த கருத்துக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான அல்ஹாஜ் றவூப் ஏ. மஜீத் காட்டமாக மறுத்துள்ளார். […]

Filed under: காத்தான்குடி செய்திகள், காத்தான்குரல்

ஜாமிஆவின் கடை விற்பனை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கேள்வி

– வார உரைகல் –

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரிக்குச் சொந்தமான கொழும்பு பழைய சோனகத் தெருவில் அமைந்திருந்த கடைக் கட்டிடம் ஒன்று விற்கப்பட்டது தொடர்பில் சமூக ஆர்வலர்களான அல்ஹாஜ் ஏ.சீ.எம். நஜீம் (விற்பனை முகவர்), அல்ஹாஜ் ஏ.சீ.எம்.கபீர் (டெலன்ட் மோட்டோர்ஸ்) ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை ‘வார உரைகல்’ லுக்கு இவ்விடயம் தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது: […]

Filed under: காத்தான்குடி செய்திகள், காத்தான்குரல்

நகரசுத்தி தொழிலாளிக்கு கன்னத்தில் அறை! சுகாதாரப் பரிசோதகர் மீது முறைப்பாடு!! சுகாதார வைத்திய அதிகாரியின் எச்சரிக்கை!!!

காத்தான்குடி நகரசபையில் 19 வருடங்களாகச் சுத்திகரிப்புத் தொழிலாளியாகப் பணியாற்றும் ஜனாப் ஏ.பி. மஹ்றூப் என்பவரின் கன்னத்தில் கடமை நேரத்தில் வேலைத் தலத்தில் வைத்து பகிரங்கமாக அறைந்ததாக இப்பிரதேசத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகராகக் கடமையாற்றும் சபாநாதன் என்பவருக்கு எதிராக காத்தான்குடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பிரதேச சுகாதாரத் தொழிலாளர்கள், சாரதிகள், மேற்பார்வை யாளர்கள் சார்பாக பாதிக்கப்பட்ட ஊழியர் ஜனாப் ஏ.பி. மஹ்றூப் ‘வார உரைகல்’லுக்கு வழங்கியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொடர்ந்து படிக்கவும் »

Filed under: காத்தான்குரல்

காத்தான்குடியின் புதிய வீதி விளக்குகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,207 வருகைகள்
free counters