காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

க‌தைய‌ல்ல‌…எச்ச‌ரிக்கை!

அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன்.

சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை. […]

Filed under: சிறுகதைகள்

பெ௰ர்ப்பலன௧ (சிறுகதை)

கடல் அரக்கன் தனது நெடிதுயர்ந்த கைகளால் சுனாமி வலையை மூச்சுப் பிடித்து ஒரே வீச்சாக வீசினான். கரையிலிருந்து சில நூறு மீட்டருக்கு உட்பட்ட பிரதேசத்தினுள் அமைந்திருந்த கட்டடங்கள், பொருட்கள், உயிர் வாழ் சீவராசிகள் என பேதம் பாராது சகலவற்றையும் அள்ளிக் கொண்டு வலையை உள்ளிழுத் தான்.

வலையைப் பிரித்து உள் அகப்பட்டவைகளைத் துப்புரவு செய்த பின்னர் மீண்டுமொரு தடவை கொசுவிய வலையை ஆகாயத்தை நோக்கி வீச, முன்னையது காரணமாக தப்பிப் பிழைத்து ஓடி உயிரைக் காப்பாற்றிக்கொண்டவைகள் போக மற்றெல்லாவற்றையும் பொறுக்கிக்கொண்டு அன்றைய பாடு அத்துடன் போதுமென இல்லமேகினான்.

பெற்றோரை இழந்த பிள்கைள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், தாலிக்கொடிகள் அறுத்தெரியப்பட்ட மனைவிகள், தாரமிழந்த கணவன் கள் என பார்க்குமிடங்களிலெல்லாம் ஒப்பாரி மயம். சுனாமி அரக்கன் ஏற்படுத்திய அட்டகாசங்களிலிருந்து மீள் எழுவதற்கு பாதிக்கப்பட்டோர் எதிர் நோக்கிய துன்ப துயரங்கள் ஏராளம். […]

Filed under: சிறுகதைகள், செய்திகள்

மயாளங்கஞம் மையவாடிகஞம் (சிறுகதை)

அல்லாஹு அக்பர்

அல்லாஹு அக்பர்….

நீண்டு நிமிர்ந்து நித்திரை செய்து கொண்டிருந்த மெளன இரவின் நிசப்தத்தை கிழித்தவாறு வளமைக்கு மாறான உரத்த தொனியில் கேட்ட சப்தம்…. கனவுகளுடன் சிலரும் கவலைகளுடன் பலரும் “களிப்புகளுடன்” கொஞ்சமானவர்களும் செய்து கொண்டிருந்த துயிலை குழப்பி வைத்தது.

உறங்கிக் கொண்டிருந்த இல்லத்தின் ஒவ்வொரு மின் குமிழ்களும் கண்விழித்துக் கொண்டன.

“அல்லாஹு அக்பர். […]

Filed under: சிறுகதைகள்

பல்ஷர் பைக்

தனது புத்தம் புதிய பல்ஸர் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய அமீன் அதனைப் பாதையில் ஓரமாக நிறுத்தி விட்டு சாவியைக் கழற்றி கையிலெடுத்துச் சுழற்றியபடி வீட்டுக்குள் வந்தான்.

அவனை நிமிர்ந்து பார்த்த அவனது தாய் தான் பின்னிக் கொண்டிருந்த பன் பாயை அவசர அவசரமாக முடித்துவிடும் முயற்சியில் ஈடுபட்டாள். தந்தை காசிம் நானா சுவரில் சாய்ந்திருந்துகொண்டு இருகரங்களையும் தலைக்குத் தாங்கலாகக் கொடுத்தபடி குந்தியிருந்தார். அவரது உடம்பு தாங்க முடியாத காய்ச்சலால் நடுங்கிக் கொண்டிருந்தது.

குசினிக்குள் வந்த அமீனின் கண்களில் ஏதோ வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தங்கை றமீசா தென்படவே, “றமீசா எனக்கு ஒரு பிளேன்ரி ஊற்றித் தா” என்றான். […]

Filed under: சிறுகதைகள்

குருத்தோலையும் கறள் ஆணி௧ளு ம் (சிறுகதை)

மருதூர் ஏ. மஜீத்

கொழும்பு காலி வீதியில் கொள்ளுப்பிட்டிச் சந்தியில் இருந்து வடக்கே சற்றுத் தூரத்தில் கடற்கரையை நோக்கிச் செல்லும் ஆங்கிலப் பெயர் கொண்ட அப்பாதையின் இரு மருங்கிலும் அமைந்துள்ள அழகான வீடுகனில் மிகவும் அழகானதும், கவர்ச்சியானதும், பெரியதுமான வீடுதான் ‘ஹெப்பி ஹோம்’ எனும் பெயர் கொண்ட அந்த வீடு.

நான்கைந்து வீடுகள் கட்டக் கூடிய இடப்பரப்பில் அந்த வீடு தனியாக அமைந்துள்ளது, அந்த வீட்டின் அழகிற்கும், கவர்ச்சிக்கும் காரணமாக இருக்கலாம்.

‘வாஸ்து சாஸ்திரப்படி கட்டினார்களோ, இல்லையோ தெரியாது. ஆனால் கட்டடக் கலைஞர் ஒருவரின் கலை வண்ணம் அவ்வீட்டில் புலனாகிறது.

வீட்டின் முன்பக்கம் ‘இன்’, ‘அவுட்’ எழுதப்பட்ட இரண்டு வாயில்கள். அதில் ஒன்நில் ‘கடிநாய் கவனம்’ அநிவிப்புப் பலகை கூட அழகான எழுத்தில் இரண்டு மொழிகனில் எழுதப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்கவும் »

Filed under: சிறுகதைகள்

ஓட்டைப்பாத்திரம் (சிறுகதை) –மும்தாஜ் பேகம்-

என்ன மூத்தம்மா? எப்பிடி சுகம்? என்ன கறி இன்டைக்கி எடுத்தது? இருந்தத்த விடவும் இளச்சிப் போயிட்டீங்களே’ என்று மூச்சு விடாமல் கேட்டவரை தீர்க்கமாய்ப் பாக்கிறேன்.

கொஞ்சங்கூட பெருமையே இல்லாம இந்த ஊத்தை பிடித்த குசினிக்குள்ளே வந்து இந்தப் பிள்ள கேட்ட கேள்வியிலேய உச்சி குளிர்ந்து பரவசமாகியது. தொடர்ந்து படிக்கவும் »

Filed under: சிறுகதைகள்

காத்தான்குடியின் புதிய வீதி விளக்குகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,207 வருகைகள்
free counters