காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்பவர்களின் கவனத்திற்கு

இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்து உபயோகிக்கின்றோம்.

ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணனி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ.

1. இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணனியில் இன்ஸ்டால் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணனியில் பதிந்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை. ஓன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம்.

2. எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.

3. தகுதி வாய்ந்த தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்தாலும் கூட நாம் தரவிறக்கம் செய்யும் மென்பொருளை பற்றி மற்றவர்களின் Reviews எப்படி உள்ளது என்பதை பார்த்த பின் செய்யவும்.

4. எந்த தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது, மொத்த தரவிறக்கம் அதிகமாக இருந்தாலும் Lastweek எவ்வளவு பேர் அதனை தரவிறக்கம் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அதிகம் பேர் பார்த்து இருந்தால், அந்த மென்பொருள் தற்போதும் நன்றாக பயன்படுகிறது. ஆகவே அந்த மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

5. ஒரே வேலையை செய்ய ஒன்றுக்கு அதிகமான மென்பொருட்களை கணனியில் வைத்து கொள்ள வேண்டாம். குறிப்பாக players, cleaners, photo editors இவைகளில் உங்களுக்கு பிடித்த மென்பொருளை மட்டும் வைத்து கொண்டு, தேவையில்லாத மற்ற மென்பொருட்களை தவிர்த்து விடுங்கள். இந்த முறைகளை கையாண்டாலே உங்கள் கணனியை பாதுகாப்பாக வைத்துகொள்ளலாம்.

Filed under: தொழில்நுட்பம்

பின்னூட்டமொன்றை இடுக

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

அண்மைய பதிவுகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,207 வருகைகள்
free counters